ஐயப்பன் கோவில் தரிசனம் குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்பதால், தொடர்ந்து எட்டாவது கட்டமாக பல மாநிலங்களில் தளர்வுகளுடனும், சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடனும் அமலில் உள்ளது. இருப்பினும், அளிக்கப்பட்டு வரும் சில தளர்வுகளின் வரிசையில்,
மத வழிபாடுகளுக்கு சமீபத்தில் ஒவ்வொரு மாநிலமாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, ஆந்திராவில் திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் கோவில்களில் பொதுமக்கள் சாமி தரிசனத்தை பாதுகாப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 16 இல் துவங்கும் மண்டலபூஜை காலம் முதல் கடும் விதிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டுள்ளது.