Categories
மாநில செய்திகள்

மண்டல பூஜையை முன்னிட்டு…. கோவில் நடை திறக்க அனுமதி…. சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு….!!

ஐயப்பன் திருக்கோவிலில் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கிற்காக கோயில் நடை திறக்கப்படவுள்ளது.

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதிலும் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.  இந்த ஆண்டுகொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக  25,000 பேர் தினமும் கோவிலுக்குள் வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டுக்கான மண்டல பூஜையானது வருகின்ற 16ஆம் தேதி தொடங்கவுள்ளது.  இதன் காரணமாக கோவில் நடையானது 15 ஆம் தேதி மாலையே திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பக்தர்கள் 16 ஆம் தேதி காலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் வரலாம். மேலும் கோவிலுக்குள் வரவேண்டுமெனில் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

இப்போது வரை முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையானது 12,00,000தை தாண்டியுள்ளது. அதிலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவசம்போர்டு செய்துள்ளது. இதனை தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்கு கொண்டு வரவேண்டிய கொண்டுவர வேண்டிய ஆவணங்கள், பயணிக்கும் சாலை அமைப்பு மற்றும் வாகன வசதி குறித்து தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்துக் கழகம் பம்பையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு 340 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. அதில் 100 குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளும் 80 குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகளும்  அடங்கும். மேலும் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் பம்பையிலிருந்து இயக்கப்படவுள்ளது. இது மட்டுமின்றி ஆன்லைன் மூலம் பதிவு செய்தும் பேருந்துகளில் பக்தர்கள் பயணிக்கலாம்.

குறிப்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் 40 பேராக இணைந்து வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் பம்பை பகுதியில் தயார் நிலையில் உள்ளன. மேலும் 90 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 36 பேர் தொழில்நுட்ப ஊழியர்கள் ஆவர்.

Categories

Tech |