இளவரசர் ஹரி அமெரிக்காவில் தன்னுடைய HRH பட்டத்தை பயன்படுத்த மாட்டேன் என்று கூறிய நிலையில், தற்போது தன்னுடைய மகளின் பிறப்பு சான்றிதழில் அந்தப் பட்டத்தை பயன்படுத்தியுள்ள சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இளவரசர் ஹாரியும், மேகனும் அரண்மனையிலிருந்து வெளியேறியதையடுத்து தம்பதியர் “இனி வேலை செய்யாத ராயல்கள்” என்பதால் இவர்கள் HRH பட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்று அரச குடும்பத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இவர்கள் இருவரும் “மெக்சிட்” என்னும் ஒப்பந்தத்தின்படி சசெக்சின் டியூக் மற்றும் டச்சஸ் என்று அடையாளம் காண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து ஹரி தன்னுடைய HRH பட்டத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு கடந்தாண்டு ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அதனை அமெரிக்காவில் ஒரு போதும் பயன்படுத்த மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
ஆனால் தற்போது இளவரசர் ஹரி தன்னுடைய மகளின் பிறப்பு சான்றிதழில் HRH பட்டத்தை பயன்படுத்தியுள்ள சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.