Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலைகளை ஆக்கிரமித்துள்ள கடைகள்…. குப்பைகளால் நிரம்பிய வாய்க்கால்…. அதிரடி நடவடிக்கையில் நகர மன்ற தலைவர்….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பஸ் நிலையத்திற்கு அருகே சுதாகர் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மெயின் ரோடு பகுதியில் வியாபாரிகள் கடைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அப்பகுதி முற்றிலுமாக சுருங்கி சாலையில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் வடிவால் வாய்க்காலிலும் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு தண்ணீர் செல்ல முடியாமல் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகின்றது.

எனவே நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி வடகிழக்கு பருவமழைக்கு முன் வாய்க்கால்களை தூர்வாரமும் சுதாகர் நகர் மெயின் ரோட்டில் நிலவும் போக்குவரத்து பிரச்சனையை சீர் செய்து ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாரிகள் பலரும் இணைந்து ஊழியர்களைக் கொண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியுள்ளனர். இதனால் அங்கு பிரச்சனைகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |