மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கடைசியாக பாடிய பாடல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது .
நான்கு தலைமுறையாக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் . இவர் மறைவதற்கு முன் கடைசியாக தேவதாஸ் பார்வதி என்ற ஆந்தாலஜி படத்திற்காக ‘என்னோட பாஷா’ என்ற பாடலை பாடிருக்கிறார் . ஆர் ஜி கே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது . எஸ் பி பாலசுப்ரமணியம் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியிருந்தாலும் இவரது கடைசிப் பாடல் என்ற வகையில் இந்தப் பாடல் உலகின் கவனம் பெற்றுள்ளது .
‘தேவதாஸ் பார்வதி’ படத்தின் கதை பிடித்துப்போக எஸ்.பி.பி இந்த பாடலை பாடிக் கொடுத்துள்ளார் . கடந்த 2020 ஜூலை இறுதியில் இந்த பாடலை பாடிக் கொடுத்த எஸ்.பி.பி ஆகஸ்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது . ஒரு உலக மகா இசைக்கலைஞனின் கடைசி பாடல் தன் படத்தில் இடம் பெற்றுள்ளதால் பெருமை கலந்த துயரத்தில் உள்ளார் இயக்குனர் ஆர் ஜி கே . மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ் எம்.ஆர்.கே, கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட் மற்றும் பூர்நிமா ரவி ,பாரத நாயுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . மலேசியா சுபாஷ்கரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு என்வி.அருண் இசையமைத்துள்ளார் .