ருதுராஜ் , டு பிளிஸ்சிஸின் அதிரடி தொடக்கத்தால் , ஹைதராபாத்தை வீழ்த்தி சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
நேற்று டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற , 23 வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி , பேட்டிங்கை தேர்வு செய்தது .தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – ஜானி பெரஸ்டோவ் ஜோடி களமிறங்கினர் .இதில் பெரஸ்டோவ் 5 பந்துகளில் 7 ரன் எடுத்து வெளியேற ,அடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே, டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்தார் .இருவரின் பாட்னர்ஷிப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது .இதில் கேப்டன் வார்னர் 55 பந்துகளில் ,57 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் .இதை தொடர்ந்து மனிஷ் பாண்டே 46 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து வெளியேறினார் .அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் இறுதிவரை அட்டமிழக்காமல்26 ரன்களும் , கேதர் ஜாதவ் 12 ரன்கள் எடுக்க, இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது.
அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே 172 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்- டு பிளிஸ்சிஸ் ஜோடி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே , இருவரின் பார்ட்னர்ஷிப் அதிரடி காட்டியது. இதில் ருதுராஜ் 36 பந்துகளில் அரை சதம் எடுக்க , டு பிளிஸ்சிஸ் 32 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினர். ஆனால் ரஷித் கான் பந்துவீச்சால் ருதுராஜ் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மொயீன் அலி 15 ரன்களிலும் , டு பிளிஸ்சிஸ் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக சுரேஷ் ரெய்னா ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார். ஜடேஜா 7 ரன்களும், சுரேஷ் ரெய்னா 15 ரன்களும் எடுக்க இறுதியில் சென்னை அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.