உக்ரைன் படைகளின் ஏவுகணை, ரஷ்யாவின் போர்க்கப்பல் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 40-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் Odesa என்ற துறைமுக நகரின் மீது தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நகர் மீது தாக்குதல் மேற்கொண்ட Admiral Essen என்ற ரஷ்யாவின் போர்க்கப்பல் மீது உக்ரேன் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அந்த கப்பலில் இருந்த ரஷ்ய படைகளின் நிலை தொடர்பான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதன் மூலம் Odesa நகரத்தின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொள்வது குறையும் என்று கூறப்படுகிறது.