உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப் போரால் உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்து போராட்டங்கள் வெடித்திருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருப்பதால், உலக நாடுகளில் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி அதிகரித்துள்ளது. எனவே, இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாட்டு மக்கள் கொந்தளித்துள்ளார்கள். ஆட்சி மாற்றமும் நடந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக வரி உயர்வு ஆகிய பிரச்சனைகளால் பனாமா, ஹெய்தி, மற்றும் ஹங்கேரி உட்பட பல்வேறு நாடுகளில் மக்களின் ஆர்ப்பாட்டம் அதிகரித்துள்ளது. கலவரங்களும் ஏற்படுகின்றன. வல்லரசு நாடாக திகழக்கூடிய அமெரிக்க நாட்டிலும் விலையேற்றம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு அங்கு விலை ஏற்றம் அதிகரித்திருக்கிறது. எனவே, அந்நாட்டு மக்கள் செலவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.