ஜெர்மன் அரசு, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது.
ரஷ்ய நாட்டின் Rosneft என்ற பிரம்மாண்ட எண்ணெய் நிறுவனத்தினுடைய மூன்று துணை நிறுவனங்கள் தற்போது ஜெர்மன் நாட்டின் கட்டுப்பாட்டிற்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் மற்றும் ரஷ்ய நாடுகளின் உறவு நன்றாக இருந்த சமயத்தில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அதிகமான கச்சா எண்ணெய் ரஷ்யாவிலிருந்து சென்று கொண்டிருந்திருக்கிறது.
எனினும், தற்போது ரஷ்ய நாட்டிலிருந்து வரும் எண்ணைய்யை ஜெர்மன் புறக்கணிக்க தீர்மானித்ததால் கச்சா எண்ணெய்க்காக வேறு ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.