Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் போர்…. ரொட்டி தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்… ஒருவர் உயிரிழப்பு…!!!

உக்ரைன் நாட்டில் ரொட்டி தொழிற்சாலையின் மீது ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டில் இருக்கும் கார்க்கிவ் பகுதியில் அமைந்துள்ள ரொட்டி தொழிற்சாலையின் மீது ரஷ்யப்படைகள், வெடிகுண்டு தாக்குதல் மேற்கொண்டதில், பாதிப்படைந்த கட்டிடத்திலிருந்து வான் உயரத்திற்கு கரும்புகை எழுந்திருக்கிறது.

இந்த குண்டுவீச்சு தாக்குதலில் ஒரு நபர் பலியானதோடு 14 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. கரும்புகை பரவியிருக்கும் நிலையில், மீட்பு குழுவினர் கடும் சிரமத்தோடு மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |