Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் விவகாரம்… போலந்து எல்லையில் காத்துக்கிடக்கும் லாரிகள்… வெளியான வீடியோ…!!!

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த சரக்கு லாரிகள் போலந்து நாட்டின் எல்லைப் பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது.

உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த சரக்கு லாரிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. எனவே, போலந்து நாட்டு எல்லைப்பகுதியான Kukuryk-Kozlovichi-ல் நீண்ட தொலைவிற்கு அதிக லாரிகள் காத்து கொண்டிருக்கின்றன.

விரைவாக கெட்டுப்போகக் கூடிய சாப்பாடுகளும் மருந்து பொருட்களும் இருப்பதால் ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் இன்னும் பல கிலோமீட்டர்கள் தாண்டி செல்ல வேண்டியிருக்கிறது. இங்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் என்ன செய்வது? என்று தெரியாமல் இருப்பதாக கூறுகிறார்கள்.

Categories

Tech |