Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிலிருந்து ஆண்கள் வெளியேற முடியாது…. எல்லைகளை அடைத்த அதிகாரிகள்…!!!

ரஷ்ய நாட்டிலிருந்து வெளியேறும் ஆண்களை தடுப்பதற்காக எல்லைகளை மூடுவதற்கு அதிபர் உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஏழு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்ய ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்கு அதிபர் புடின் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. அதன்படி கடந்த புதன்கிழமை அன்று அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் படையை திரட்ட உடனடி அறிவிப்பை வெளியிட்டார்.

எனினும் இந்த அறிவிப்பால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் ராணுவத்தில் இதற்கு முன்பு பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டும் தான் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. முதல் நிலையாக, சுமார் மூன்று லட்சம் வீரர்கள் திரட்டப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார்.

எனினும், இந்த அறிவிப்பால் மக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள். வருங்காலத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறுகிறார்கள். எனவே இராணுவத்திற்கு தேவையான வயதில் இருக்கும்  ஆண்கள் நாட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி விசா தேவைப்படாத அஜர்பைஜான், துருக்கி போன்ற நாடுகளுக்கு விமான டிக்கெட்டின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.

இதற்கிடையில் ரஷ்யாவை சேர்ந்த 8500 அதிகமான மக்கள் கடந்த சனிக்கிழமை அன்று பின்லாந்துக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மக்கள் அதிகமாக நாட்டிலிருந்து வெளியேறியதால் அதிபர் புடின் கோபமடைந்தார். எனவே, நாட்டிலிருந்து ஆண்களை வெளியேறவிடாமல் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார். அதன்படி ரஷ்ய நாட்டை சேர்ந்த நபர்கள் ராணுவத்தின் அனுமதி பெற்ற பிறகு தான் விசா பெற முடியும் என்ற கட்டுப்பாட்டை விதித்திருக்கிறார்கள்.

Categories

Tech |