Categories
உலக செய்திகள்

உக்ரைனில் சுகாதார கட்டமைப்புகள் மீது தாக்குதல்…. வன்மையாக கண்டிக்கும் WHO…!!!

உலக சுகாதார மையமானது, உக்ரைன் நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை உறுதிப்படுத்தியிருக்கிறது.

ரஷ்ய படைகள், முதலில் உக்ரைன் நாட்டின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் மேகொள்வதாக தெரிவித்து, அந்நாட்டிற்குள் நுழைந்த நிலையில், உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம், இந்த தாக்குதல் நடந்திருப்பதை உறுதி செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதை உலக சுகாதார மையம் உறுதிப்படுத்துகிறது.

இதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. சுகாதார வசதிகள் அல்லது பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல், மருத்துவ முறையை மீறும் செயலாகும். மேலும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதற்கு சமம். 6 பேரை கொன்று 11 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட செய்த இந்த தாக்குதல்கள் கடுமையாக தண்டிக்கத்தக்கது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |