Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து ஒரு நகரை துண்டிக்க முயலும் ரஷ்யா….. வெளியான தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் லிசிசான்ஸ்க் நகரை தெற்குப் பகுதியிலிருந்து துண்டிப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் டான்பாஸ் நகரை முழுவதுமாக கைப்பற்ற தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனவே, சீவீரோடொனெட்ஸ் என்ற நகரத்தை விட்டு உக்ரைன் படையினர் வெளியேறிவிட்டனர். இதனால், ரஷ்யப்படையினர், வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி அங்கிருக்கும் கட்டிடங்களை தகர்த்து வருகின்றனர்.

இதற்கு முன்பு அந்த நகரில் 10 லட்சம் மக்கள் வசித்து வந்தனர். ஆனால் தற்போது வெறும் பத்தாயிரம் மக்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். மேலும், உக்ரைன் படையை சேர்ந்த ஒரு பிரிவு, அங்கிருக்கும் அஜோட் ரசாயன ஆலையில் வசிக்கும் 500 மக்களுடன் சேர்ந்து இருக்கிறார்கள்.

இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருக்கும் லிசிசான்ஸ்க் என்ற நகரத்தை தெற்கு பகுதியில் இருந்து துண்டிப்பதற்கு ரஷ்ய படையினர் முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |