உக்ரைனின் 40-க்கும் மேற்பட்ட நகரங்களை ரஷ்யா குண்டு வீசி தகர்த்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி 8 மாதங்கள் ஆகின்றது. இந்த போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கின்றது. இதற்கிடையில் இந்த போரில் உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யா தன்னுடன் ரஷ்யா கைப்பற்றியது. இது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த நான்கு பகுதிகளையும் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் சர்வதேச சட்டத்தை இந்த செயல் மீறுவதாக உலக நாடுகள் கண்டித்து வருகின்றன.
இந்த நிலையில் உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்ய தன்னுடன் இணைத்துக் கொண்டதை கண்டித்து ஐநா சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் கொதித்து எழுந்த ரஷ்யா உக்ரைனின் 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது இன்று ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள கப்பல் கட்டும் மையம் மற்றும் துறைமுகம் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் மைகோலாயின் தெற்கு நகரத்தில் குண்டு வீச்சு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.