Categories
உலக செய்திகள்

‘ஏவுகணை பரிசோதனை’…. துல்லியமாக தாக்கப்பட்ட இலக்கு…. பரபரப்பில் ஐரோப்பிய நாடுகள்….!!

ஏவுகணை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் ஐரோப்பிய நாடுகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நேட்டோ படைகள் கருங்கடல் பகுதியில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் சிர்கான் ரக ஹைபர்சோனிக் ஏவுகணைகளை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது. அதிலும் இந்த ஏவுகணையானது கப்பலில் இருந்து ஏவப்பட்டுள்ளது.

இது பேரண்ட்ஸ் கடல் பகுதியில் உள்ள இலக்கை குறிவைத்து துல்லியமாக தாக்கியுள்ளது. மேலும் இந்த ஏவுகணையானது ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் இந்த சோதனையானது ஐரோப்பிய நாடுகளின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |