இந்தியாவிற்கு அதிகமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா முதல் இடத்தை பிடித்துள்ளது.
ரஷ்ய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணையின் அளவானது 2.4% குறைந்திருந்தது. அதே சமயத்தில் இந்திய நாட்டிற்கு அதிகமாக கச்சா எண்ணெய் விநியோகிப்பதில் முதல் இடத்தில் ஈராக்கும் இரண்டாம் இடத்தில் சவுதி அரேபியாவும் இருந்தது.
இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் ரஷ்யாவின், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பங்கானது, 22% உயர்ந்தது. அந்த வகையில் ரஷ்யா, ஈராக் மற்றும் சவுதி அரேபியா நாடுகளை பின்னுக்கு தள்ளியது. இந்திய நாட்டிற்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தை ரஷ்யா பிடித்துள்ளது, ரஷ்ய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு அக்டோபர் மாதத்தில் 9,46,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.