ஐ.நாவிற்காக உக்ரைன் நாட்டின் நிரந்தர பிரதிநிதியான செர்ஜி கிஸ்லிட்சியா, ரஷ்ய தாக்குதலை கடுமையாக கண்டித்திருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20-வது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் முக்கியமான நகரங்களில்ரஷ்யப்படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நியூயார்க்கில் நடந்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐநா விற்கான உக்ரைன் நாட்டின் நிரந்தர பிரதிநிதியான செர்ஜி கிஸ்லிட்சியா உக்ரைன் சார்பாக பேசினார்.
அவர் தெரிவித்ததாவது, ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டில் தொடர்ந்து போர் மேற்கொள்கிறது. மனித குலத்திற்கு எதிராக குற்றங்கள் செய்து வருகிறது. 80 வருடங்களுக்கு முன் நாசி படைகள் இயங்கியது போன்று, ரஷ்யா தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் நகர்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் மீது தாக்குதல் நடக்கிறது என்று கூறியிருக்கிறார்.