ரஷ்ய அதிபர் பங்கேற்ற விழாவில் ராணுவ வீரர் ஒருவர் அதிபர் முன்னிலையில் கார் கண்ணாடியை உடைக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போர் முடிந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடிய நிலையில் ராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவரின் கார் கண்ணாடியை துப்பாக்கி மூலம் மிகவும் ஆக்ரோஷமாக உடைக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீவிரவாத தாக்குதல்களில் ஒன்றை முறியடித்து விட்டதாக ரஷ்யா இச்சம்பவத்தை விவரித்துள்ளது. வெளியான காணொளியில் அமைதியாக நடந்து வரும் கான்ஸ்கிரீட் நிகிதா என்ற ராணுவ வீரர் யாரும் எதிர்பாரா சமயம் திடீரென்று பாதுகாப்பு படையை சேர்ந்தவரின் கார் கண்ணாடியை தனது கையில் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கி மூலம் உடைப்பதற்கு முயற்சி செய்கிறார்.
500 அடி தொலைவில் அதிபர் அமர்ந்திருக்க மற்ற அதிகாரிகள் அந்த வீரரை பிடித்தனர் நல்லவேளையாக அவரைப் பிடித்த சமயம் துப்பாக்கி வெடிக்கவில்லை. இச்சம்பவத்தை சிலர் தீவிரவாத தாக்குதல் என கூறி வர, அதிபர் முன்னிலையில் ராணுவ மரியாதை செலுத்துவதற்கு அனுமதிக்காத கோபத்தினால் இவ்வாறு செய்ததாக சில செய்திகள் வெளியாகி வருகின்றன.