Categories
உலக செய்திகள்

#Rusiya-UkraineWarUpdates: இந்தியா நடுநிலை வகிக்கும்…..!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது.

அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையே போர் வெடித்துள்ள சூழலில் இந்த பிரச்சனையில் இந்தியா நடுநிலை வகிக்கும் என்று வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங் பதிலளித்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் உடன் இந்தியப் பிரதமர் மோடி பேச வேண்டும் என இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம் வலியுறுத்திய நிலையில் இந்தியா நடுநிலை வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |