Categories
இந்திய சினிமா சினிமா

“நடிகையுடன் காதல் கிசுகிசு”….. கொந்தளித்த சமந்தா ரசிகர்கள்….. நாகசைதன்யா மீது இணையத்தில் கடும் விளாசல்…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 7 வருடங்களுக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்து விட்டனர். இந்த பிரிவுக்குப் பிறகு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக அடிக்கடி இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவருமே விளக்கம் அளிக்கவில்லை.

ஆனால் இருவர் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வெளிநாட்டில் நாக சைதன்யா மற்றும் சோபிதா ஜோடியாக எடுத்த புகைப்படம் ஒன்று  இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் காதல்‌ உறுதி தான் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் நாக சைதன்யா மற்றும் சோபிதா இணைந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்த சமந்தா ரசிகர்கள் பலரும் நாகசைதன்யாவை இணையதளத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஆனால் நாக சைதன்யாவின் ரசிகர்கள் காதல் வதந்தியை நீங்கள் தான் பரப்பி விட்டீர்கள் உண்மை தெரியாமல் எதுவும் பேச வேண்டாம் என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள். மேலும் நடிகை சமந்தா தற்போது நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாக சைதன்யா அவரை சந்தித்து நலம் விசாரித்ததாகவும், விரைவில் இணைந்து இருவரும் வாழப்போவதாகவும் தகவல்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |