Categories
சினிமா

இது உண்மையல்ல… தனுஷ் திரைப்பட வதந்தியால் கொந்தளித்த படக்குழு…!!

நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்திலிருந்து நடிகை சம்யுக்தா விலகிவிட்டதாக இணையதளங்களில் வெளியான தகவலை படக்குழு மறுத்துள்ளது.

நடிகர் தனுஷ், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி எனும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் மூலமாக அவர், தெலுங்கு திரையுலகில்  அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை, வெங்கி ஆடலூரி என்ற பிரபல இயக்குனர் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்திலிருந்து நடிகை சம்யுக்தா மேனன் விலகிவிட்டார் என்ற தகவல் இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது. இதனை அறிந்த படக்குழுவினர், இச்செய்தி வதந்தி என்றும் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதாகவும் கூறியிருக்கிறார்கள். மேலும், எங்கள் திரைப்படத்தை பற்றி வதந்தி பரப்பாதீர்கள், என்றும்  கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |