Categories
மாநில செய்திகள்

கீழடி அகழாய்வில் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டதாக பரவும் தகவல் வதந்தி… தொல்லியல் துறை!!

கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட பகுதிகளில் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகின்றன.

தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், மதுரை மாவட்ட உதவி இயக்குனர் சக்திவேல், தொல்லியல் அலுவலர்கள் ஆசைத்தம்பி, பாஸ்கரன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அகழாய்வின் போது பானை ஓடுகள், உறைகிணறு, அடுப்பு போன்ற தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், விலங்கின் எலும்பு ஒன்று கண்டறியப்பட்டது.

முழு உருவத்தோடு உள்ள அந்த எலும்பு எந்தவகையான விலங்கு என்பது குறித்து தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு லெமேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கீழடியில் நடராஜர் சிலை கிடைத்துள்ளதாக ஒரு வீடியோ சமூகத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் வதந்தியே என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியிருந்தார்.

இதனிடையே, தொல்லியல் துறை சார்பிலும் விளக்கம் அளித்துள்ளது. அதில், கொரோனா அச்சத்தால் கடந்த 3 மாதங்களாக அகழாய்வு நாடாகும் பகுதியில் யாருக்கும் அனுமதியில்லை. மேலும் தொல்லியல் துறை பணியாளர்கள் தவிர வேறு யாரும் குழிக்குள் இறங்க முடியாது என விக்கலாம் அளித்துள்ளார். எனவே கீழடி அகழாய்வில் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது.

Categories

Tech |