Categories
உலக செய்திகள்

அப்படி போடு….!! “அனைவரும் இறங்கி போராட வேண்டும்”…. ஜெலன்ஸ்கி எடுத்த அதிரடி அறிவிப்பு….!!!

ரஷ்யாவிற்கு எதிராக இன்று போராட்டம் நடத்துங்கள் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது 29வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் இந்த போரினை நிறுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகளில் சில இடங்களில் ரஷ்யாவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக உலக அளவில் உள்ள மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இன்று உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலக அளவில் மக்கள் தெருக்கள், வீதிகளில் கூடி உக்ரைன் அடையாளங்களுடன் போராட்டம் நடத்துங்கள்” என்று கூறியுள்ளார்

Categories

Tech |