காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு 50 இடங்களில் அனுமதிக்க கேட்ட நிலையில் 6 இடங்களில் மட்டும் நடத்திக் கொள்ளலாம். 44 இடங்களில் உள்ளடங்குகளில் நடத்துக் கொள்ளலாம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சுப்ரமணியம் என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். உள்ளரங்க கூட்டமாக நடத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட அதே காலத்தில் பிற அமைப்புகளுக்கு நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், இதுவே சட்ட விரோதமானது. பாரபட்சம் காட்டும் வகையில் அமைந்து இருப்பதாக கூறி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு ஓரிரு நாட்களில் உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வர இருக்கிறது.