Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: தமிழக அரசுக்கு உத்தரவு …!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை உள்ளரங்கில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி  காந்தி ஜெயந்தி அன்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தரப்பில் காவல்துறையில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சில மனுக்கள் முடிவு எடுக்கப்படாத நிலையிலும், 50 இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 44 இடங்களில் உள்ளரங்குகளில் நடத்திக் கொள்ளுங்கள் என்று அனுமதி அளித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் தரப்பில் மனுதாரர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும்  சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரிக்கு வந்தது. அப்போது அரசு தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவின் நகல்கள் தங்களுக்கு கிடைக்கப்படவில்லை. கிடைத்ததும் அதை பெற்றுக்கொண்ட பிறகு,  பதில் அளிப்பதற்கு அவகாசம் வேண்டும் என  தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றம் உள்ளரங்கில் நடத்திக் கொள்ள அனுமதிக்க அளிகப்பட்ட நிலையில், அதை நடத்தாமல் ரத்து செய்தது ஆர்எஸ்எஸ் அமைப்பு தான். எனவே இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தரப்பில் ஜனவரி 28 மற்றும் 29ஆம் தேதிகளில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும்,

அதற்கேற்றவாறு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்க வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ஆர்எஸ்எஸ் அமைப்பு கூட்டத்திற்கு அனுமதி அளிக்க கோரிய மனுக்களை பரிசீலித்து முடிவெடுக்க காவல்துறைக்கு உத்தரவு விட்டதுடன்,  வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

Categories

Tech |