கொரோனா நோய் தடுப்பு பணிக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 200 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 109 பேர் உயிரிந்துள்ள நிலையில் 4,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 11ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து ஏரளாமானோர் நிதியுதிவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா நோய் தடுப்பு பணிக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர். இதுவரை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் – ரூ. 5 கோடி, சக்தி மசாலா நிறுவனம் – ரூ. 5 கோடி, ஏசியன் பெயிண்ட் நிறுவனம் – 2 கோடி கொடுத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.
மேலும் திமுக சார்பில் ரூ. 1 கோடி மற்றும் , டிடிவி தினகரன் ரூ. 1 கோடி, தமிழக ஆளுநர் ரூ. 1 கோடியும் அளித்துள்ளனர். தற்போது வரை கொரோனா தடுப்புப் பணிக்காக இதுவரை நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து ரூ.63.30 கோடி நிதி கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.