மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். 2 ஹெக்டேருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய், மூன்று தவணைகளாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் கொடுக்கும் நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை 2000 என்று வருடத்திற்கு 6000 விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலகங்களில் விவசாயிகள் தங்களது நில விவரம், வங்கிக்கணக்கு, ஆதார் எண்ணை சமர்ப்பித்து திட்டத்தில் சேரலாம்.
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் வசதிகள், கட்டாயம் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இனைத்திருக்க வேண்டும். அப்படி இணைக்காவிட்டால் இந்த நிதியில் இருந்து பணம் கிடைக்காது. ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் மாதத்திலிருந்து மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டிசம்பர் மாதம் தான் கடைசியாக இருந்ததால் உடனடியாக சென்று வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து அதன் மூலம் நீங்கள் நிதி உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.