Categories
தேசிய செய்திகள்

ரூ.55 லட்சம் கொடு… இல்லனா உடலில் கட்டியுள்ள வெடிகுண்டை வெடிக்க வச்சுடுவே… வங்கிக்குள் நுழைந்து மிரட்டிய நபர்…!!!

மராட்டிய மாநிலத்தில் வங்கிக்குள் புகுந்து 55 லட்சம் பணம் தரவில்லை என்றால் என் உடம்பில் உள்ள வெடிகுண்டை வெடிக்க வைத்து விடுவேன் என்று மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம், வர்தா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு வங்கிக்குள் புகுந்த முகமூடி அணிந்த நபர் ஒருவர் வங்கி ஊழியரிடம் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். தனக்கு 55 லட்சம் வேண்டுமெனவும், கொடுக்கவில்லை என்றால் தன் உடம்பில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து விடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து வங்கிக்குள் அதிரடியாக புகுந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர்.

இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்தபோது அந்த நபருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பணம் தேவைப்பட்டுள்ளது. இதற்காக அவர் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். அதனால் தனது உடலில் பசயை பூசிக்கொண்டு ஆறு குழாய்களில், கவரை வைத்து சுற்றி போலி வெடிகுண்டுகளை போல் உருவாக்கியுள்ளார். அதை வைத்து வங்கிக்கு சென்று மிரட்டல் விடுத்துள்ளார். அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Categories

Tech |