Categories
தேசிய செய்திகள்

ரூ. 50,000… எல்லாருக்கும் கடன் தள்ளுபடி… வெளியான ஹேப்பி நியூஸ்..!!

ரூ. 50,000 வரை விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

மாநிலத்தில் சுமார் 9 லட்சம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ஜார்க்கண்டிலுள்ள ஹேமந்த் சோரன் அரசாங்கம் ஐம்பதாயிரம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி அரசு அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு 2019 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கட்சி அளித்த வாக்குறுதியை ஓரளவுக்கு நிறைவேற்றியுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டில் 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தங்கள் கட்சிக்கு வாக்களித்தால் 2000 வரை வேளாண் கடன் தள்ளுபடி செய்வதாக ஆளும் கட்சி உறுதியளித்துள்ளது. காங்கிரஸ் நிதியமைச்சர் ராமேஸ்வர் ஓரான், கடன் தள்ளுபடி முதலில் குறு விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில் ஒரு லட்சம் மற்றும் 2 லட்சம் வரையிலான கடன்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்யும்.

2020 மார்ச் 31 வரை எந்த ஒரு வகையிலும் 50,000 வரை வேளாண் கடன்களை பெற்று விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் கடன் மட்டுமே தள்ளுபடி செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முடிவால் மாநிலத்தில் 9 லட்சம் வரையிலான விவசாயிகள் பயனடைவார்கள் என்று சுக்தேவ் சிங் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |