Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: ரூ.450 கோடி வசூல் சாதனை – தெறிக்கவிட்ட பொன்னியின் செல்வன் ..!!

பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில் விரைவாக 100 கோடி என  தமிழகத்தில் வசூல் செய்த திரைப்படம் என்று தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வந்த, பென்னியின் செல்வன் திரைப்படம் தற்பொழுது 450 கோடி ரூபாய் வசூல் என்ற ஒரு சாதனை படைத்திருக்கிறது.

ரிலீசான 20 நாட்களில் இந்த சாதனையை பொன்னின் செல்வன் திரைப்படம் கடந்துள்ளது. அதேபோல இந்த திரைப்படம் இன்னும் இரண்டு வாரங்களில் வருகின்ற நவம்பர் நான்காம் தேதி ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதால்,  அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளாகவே 500 கோடி வசூல் செய்த திரைப்படமாகவும் மாறும் என்பது இன்னொரு சிறப்பு அம்சமாக இருக்கின்றது.

பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2 என்று இரண்டு பாகங்களுக்கும் லைக்கா ப்ரொடெக்ஷன் செலவு மொத்த பட்ஜெட்டாக செலவு செய்த 450 கோடி ரூபாய்யை  திரும்ப பெற்றிருக்கிறது. எனவே இதன் பிறகு பொன்னின் செல்வன் திரைப்படம் வசூல் செய்யும்,

ஒவ்வொரு ரூபாயும் லைக்காவுக்கே மிகவும் அபரிதமான வசூல் லாபத்தை பொன்னின் செல்வன் கொடுக்கும். அடுத்த பாகமும் 500 கோடிக்கும் மேலாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் திரையுலகில் ஒரு மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ஆகும். தற்போது வசூலில் சூப்பர் முத்திரை பதித்திருக்கிறது.

Categories

Tech |