பிராமணப் பெண்களுக்கு திருமண உதவி செய்வதற்கு அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பிராமணர்களில் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் இருந்து வரும் மணப்பெண்களுக்கு பண உதவி செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் வாக்காளர் எண்ணிக்கையில் 3 முதல் 5 சதவீதம் பிராமணர்கள் உள்ளனர். மாநில கழக மாநில பிராமண மேம்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி அருந்ததி திட்டத்தின் கீழ் பிராமணர்களின் குடும்பங்களுக்கு 25 ஆயிரம் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் பெண் மாநிலத்தில் ஒரு பூசாரியை மணந்தால் அவர்கள் மூன்று லட்சம் பெறுவார்கள்.
மேலும் சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிராமணப் பெண்களுக்கு மட்டும் இது பொருந்தும். மற்ற நிபந்தனைகள் மணமகள் பிராமண சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் அவர்களுடைய திருமணம் முதல் திருமணம் ஆகவும் இருக்கவேண்டும். குடும்பம் பொருளாதாரம் போன்றவற்றில் பின் தங்கிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் இருக்க வேண்டும் என்று கூறினார். இந்த திட்டம் எதிர்கட்சிகள் இடையே கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. திருமணம் என்பது ஒரு தனிநபர் விருப்பம்.
மற்றவர்களைவிட குறிப்பிட்ட வகையான சமூக திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் பிற்போக்குத்தனமான மற்றும் பெண்களுக்கு விரோதமானது என காங்கிரஸ் தலைவர் ஒய்.பி. ஸ்ரீவத்ஸா கூறியுள்ளார். மேலும் ஏன் பிராமணப் பெண்களின் தொழில் முனைவோருக்கு கடன் கொடுக்க முடியாது? ஏழை பிராமண சிறுமிகளுக்கு கல்வி கடன் கொடுக்க முடியாது? என்று கேள்வி எழுப்பி உள்ளார். குறிப்பாக பூசாரிகளை மேம்படுத்துவதற்காக இந்த திட்டத்தை உருவாக்கி உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். பூஜை சடங்குகள் மற்றும் மாலை பிரார்த்தனைகளில் பயிற்சி பெற விரும்பும் கிட்டத்தட்ட 4000 நபர்களுக்கு மாதத்திற்கு 500 வழங்கப்படும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.