மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 2,80,000 ரூபாயை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டாமாறுதல், கல்விக்கடன், விவசாய கடன், புதிய குடும்ப அட்டை ஆக்கிரமிப்பு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி சுமார் 190 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
அதனை பெற்றுக்கொண்ட அவர் பிரச்சினைகள் குறித்து உரிய நேரத்தில் விசாரணையை முடித்து அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க கூறி துறைவாரியான அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் சுமார் ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரத்தை திருமண உதவித் தொகையாக வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அதிகாரி, துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.