Categories
மாநில செய்திகள்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முடிதிருத்தும் ஊழியர்கள் என 35.65 லட்சம் பேருக்கு ரூ.2,000 நிவாரணம்: முதல்வர்!

கொரோனா பாதிப்புகள், தடுப்பு பணிகள், கட்டுப்பாடுகள் குறித்து காணொலி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றிவருகிறார்.

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார். அவர் கூறியதாவது, ” கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட முடிதிருத்தும் ஊழியர்கள் என மொத்தம் 35.65 லட்சம் பேருக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 13.59 லட்சம் கட்டுமான தொழிலாளர் குடும்பங்கள், 86,925 ஓட்டுநர் தொழிலாளர் குடும்பங்களுக்கும் 2 மாதத்திற்கு கூடுதல் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு ஊரடங்கு காலத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. பயிர்க்கடன், வீட்டுக்கடன், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஜூன் 3ம் தேதி வரை 378 கொடியே 96 லட்சத்து 7 ஆயிரத்து 354 ரூபாய் கிடைத்துள்ளதுள்ளது.

தமிழகத்தில் 123 அரசு மருத்துவமனைகள், 169 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 292 மருத்துவமனைகள் கோவிட் மருத்துவமனைகள் மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் தொற்று பரவலை தடுப்பது சாத்தியமாகாது. மேலும் மக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அவர் தனது உரையில் தெரிவித்தார்.

Categories

Tech |