ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலமாக 150 கோடிக்கு அதிகமாக சம்பாதித்த முதல் வீரராக எம்எஸ் தோனி திகழ்கிறார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் முதல் முதலில் நடந்தபோது தோனி மிகப்பெரிய வீரராக இருந்தார். அப்போது அவரை சிஎஸ்கே ரூ.6 கோடிக்கு ஏலம் எடுத்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதே தொகையை தோனி சம்பாதித்தார். 2016ஆம் ஆண்டு பிசிசிஐ முதல் தர வீர தக்கவைப்பு தொகை ரூ.8 கோடியாக அதிகரித்தது. அதனால் தோனி 2011 முதல் 2013 வரை ரூ.8.28 கோடி சம்பாதித்தார்.
2014 ஆம் ஆண்டு ஏற்பட்டு பெரிய ஏலத்திற்கு முன்னதாக மீண்டும் தக்கவைப்பு வீரர்கள் தொகையை பிசிசிஐ உயர்த்தியது. இதனால் 2014-15 ஆம் ஆண்டு தோனி ரூ.12.5 கோடி சம்பாதித்தார். அதன்பிறகு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக விளையாடிய இரண்டு சீசன்களில் ரூ.25 கோடி சம்பாதித்தார். 2010 ஆம் ஆண்டு ஐபிஎல்க்கு சிஎஸ்கே மீண்டும் திரும்பியதிலிருந்து ரூ.60 கோடி ரூபாய் தோனி சம்பாதித்தார்.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே ஐபிஎல் கிரிக்கெட் மூலமாக ரூ.150 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்த வீரராக தோனி முதலிடத்தில் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து ரூ.146.6 கோடி சம்பாதித்து ரோகித் சர்மா இரண்டாவது இடத்திலும், ரூ.143.2 கோடி சம்பாதித்து விராட்கோலி மூன்றாவது இடத்தில் உள்ளனர்.