Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரூ12,00,000……. வாடகை வருமா…? வராதா…? மாவட்ட ஆட்சியரிடம் ஓட்டுனர்கள் மனு….!!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மாவட்ட அலுவலர்கள் பயன்படுத்திய வாடகை கார்களுக்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 12 லட்சம் பாக்கியை தரக்கோரி சுற்றுலா உரிமையாளர்கள் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

சுற்றுலா கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 135 வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கும், 125 வாகனங்கள் காவல்துறையினருக்கும் வாடகைக்கு விடப்பட்டது. இதையடுத்து தேர்தல் முடிந்த நிலையில் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட 125 கார்களுக்கான வாடகை குறித்த நேரத்தில் தரப்பட்டது.

Related image

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் பயன்படுத்திய வாடகைக்கு இன்றளவும் வாடகை பணம் வரவில்லை. இதனால் சொந்த வாகனம் வைத்திருப்போர் அதனை வாடகைக்கு விட்டு வருமானத்தை சமாளிக்க வேண்டியதாக உள்ளது. மேலும் 20 லட்சம் வாடகை பணத்தில் ரூ8 லட்சம் மட்டுமே தந்த நிலையில், பாக்கியுள்ள 12 லட்சம் ரூபாயை விரைவில் வாகன ஓட்டிகளுக்கு செலுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.

Categories

Tech |