சிறுவன் தன் அம்மா வங்கி கணக்கில் இருந்து கேம் விளையாட லட்சக்கணக்கில் பணம் செலவளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வசிப்பவர் ஜெசிகா ஜான்சன். இவருக்கு 6 வயதில் ஒரு சிறுவன் உள்ளார். இந்நிலையில் இவருடைய வங்கி கணக்கில் இருந்து 16 ஆயிரம் டாலர்கள் (அதாவது இந்திய மதிப்பில் 11 லட்சம்) எடுக்கப்பட்ட தகவலை தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த பணம் ஆப்பிள் சாதனத்தில் உள்ள ஆப்களை பெற செலவழிக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. இதை ஜெசிகா முதலில் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டு மோசடியாக இருக்கலாம் என்று நினைத்துள்ளார்.
இது குறித்து அதிர்ச்சி அடைந்த ஜெசிகா அதிகார பூர்வமாக புகார் அளித்து உள்ளார். இதையடுத்து இவரின் கிரெடிட் கார்டு கம்பெனி இந்த புகார் குறித்து நடத்திய விசாரணையில் அதை செய்து அவருடைய ஆறு வயது மகன் தான் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் ஜெசிகாவின் ஐபேடை அவருடைய 6 வயது மகன் கேம் விளையாட பயன்படுத்தியுள்ளார். இதில் கேம் மற்றும் அதற்கு தேவையான ஆப்களை ஜெசிக்காவின் அக்கவுண்ட் மூலம் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து அந்த சிறுவன் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக கடந்த ஜூலை மாதம் 1.8 லட்சத்திற்கு ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து வாங்கியுள்ளார். இதனால் தன்னுடைய மகன் விஷயம் தெரிந்தவுடன் ஜெசிகா ஆப்பிள் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் ஆப்பிள் நிறுவனம் கொள்கைகளின்படி 60 நாட்களுக்கு மட்டுமே மீண்டும் பணத்தை திரும்ப பெற முடியும். ஆனால் இது 60 நாட்கள் கடந்து விட்டதால் இந்த பணம் திரும்ப பெற முடியாது என்று கூறியுள்ளது.