Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு ரூ.10, 000…. அதிரடி அறிவிப்பு – மம்தா பானர்ஜி…!!

பிளஸ்-2 மாணவர்களுக்கு செல்போன், டேப்லெட்டுகள் வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் இருக்கிறது. அங்கு அங்கு அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் தற்போது ஆட்டம் கண்டு வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், பாஜகவின் வளர்ச்சி தான். சமீபத்தில்  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் முன்னர் எப்போதும் இல்லாத அளவில் பாஜக வெற்றி கண்டது. அதோடு மட்டுமல்லாமல் திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் பாஜகவிற்கு தாவி வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பிளஸ் -2 மாணவர்களுக்கு செல்போன் மற்றும் டேப்லெட் வாங்குவதற்கு அரசு சார்பில் ரூபாய் 10,000 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். சுமார் 1.5 லட்சம் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் ஜூன் மாதம் நடைபெற உள்ள பொது தேர்வுக்கு பயிற்சி பெறலாம் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |