முகக்கவசம் அணியாமல் வெளியே நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்., 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட 33 மாவட்டங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 210 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் முகக் கவசம் அணியாமல் வெளியே நடந்து செல்பவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, 6 மாதத்திற்கான வாகன ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்