பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, மேலும் ஒரு வாரத்திற்கு அரச குடும்பத்தினர் துக்கமனுசரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராணியார் மறைவை தொடர்ந்து, நாடு முழுக்க துக்கமனுசரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவரின் இறுதிச்சடங்குகள் நேற்று நடந்தது. தேசிய துக்கமனுசரிப்பும் முடிவடைந்துள்ளது. எனினும், அரசக்குடும்பத்தினர், தனிப்பட்ட வகையில் துக்கமனுசரிக்க இருப்பதாக மன்னர் அறிவித்திருக்கிறார்.
எனவே, மகாராணியாரின் துக்கமனுசரிப்பு தினங்கள் 17-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராணியாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின், நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தற்போது, அறிவிக்கப்பட்ட இந்த ஒரு வார துக்கமனுசரிப்பு அரச குடும்பத்தினருக்கு மட்டும் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரச குடும்ப பணியாளர்கள் , பிரதிநிதிகள் போன்ற அனைவரும் கடைப்பிடிக்க இருக்கிறார்கள். வழக்கமாக தேசிய துக்கமனுசரிப்பு 10 தினங்கள் தான். எனினும், அரசகுடும்பம் தீர்மானித்தால், அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.