சென்னை எண்ணூரில் ரவுடிகள் இடையேயான மோதலில் துப்பாக்கியால் சுட்ட ரவுடி ரமேஷ் கைது செய்யப்பட்டார்.
சென்னை எண்ணூரில் ஒரு வாரத்திற்கு முன்பு ரவுடி ரமேஷ் மற்றும் செந்திகுமார் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் செந்தில்குமாரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரது இடுப்பு பகுதியில் குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தேடி வந்த போலீசார் எண்ணூரில் இன்று ரவுடி செந்தில் குமாரை சுட்ட ரவுடி ரமேஷை கைது செய்தனர். ரவுடி ரமேஷிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய ரவுடி அலெக்ஸாண்டர் என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு வட சென்னையில் ரவுடி வல்லரசு போலீசாரால் சுட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.