Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேடப்பட்ட முக்கிய குற்றவாளி இவர் தான்… சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி… போலீசாருக்கு தெரியவந்த உண்மை…!!

ஆயுதங்கள் மற்றும் கைத்துப்பாக்கியுடன் கைதான நபர் ஏற்கனவே போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள மணலி புதுநகர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆயில் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரை வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் இம்ரான் என்ற ரவுடி கடந்த சில நாட்களுக்கு முன்பு மிரட்டி 3 லட்சம் ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மணலி புதுநகர் போலீசார் தப்பி ஓடிய இம்பிரானை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் இம்ரான் தாறுமாறாக காரை ஓட்டி சென்று பொதுமக்கள் மீது மோதியதால், கோபம் அடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர்.

இதனையடுத்து போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது அதில் இரண்டு கத்திகள், நீண்ட வாள், ஒரு துப்பாக்கி, கர்நாடக பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டுகள் மற்றும் விதவிதமான நம்பர் பிளேட்டுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விட்டனர். அதன்பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி இம்ரான் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே கைத்துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் கைதான நபர் மணலி புதுநகர் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. எனவே கோர்ட்டில் முறைப்படி மனு தாக்கல் செய்து அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Categories

Tech |