Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொத்தமாக பிடிச்சாச்சு….. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை…!!

ஒரே நாளில் 47 ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் ஒரே நாளில் 47 ரவுடிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் தாங்கும் விடுதிகளில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வங்கிகள், ஏ.டி.எம் மையங்கள், நகை கடைகள் போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.

Categories

Tech |