ரோஷ்னி ஹரிப்ரியன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி. யிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதனையடுத்து, சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து ரோஷ்னி ஹரிப்ரியன் சில காரணங்களால் விலகினார். மேலும், அவருக்கு படவாய்ப்புகள் வந்ததன் காரணமாக இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் லுக்கில் அசத்தும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.