Categories
மாநில செய்திகள்

காதலர் தினத்தால்…. “ரோஜா பூக்களுக்கு கிராக்கி”… ஒரு பூ எவ்வளவு தெரியுமா..?

கொரோனா காரணமாக இந்த ஆண்டு ரோஜா உற்பத்தி விலை குறைந்ததால், காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூவின் விலை அதிகரித்துள்ளது.

.ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே காதலர் தினம் ஞாபகத்திற்கு வரும் அன்றைய தினம் ரோஜா பூக்களுக்கு மவுசு அதிகம். நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஓசூர் மற்றும் பெங்களூரில் இருந்து பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை, வயலட், ரோஸ் போன்ற வண்ணங்களில் அழகழகான ரோஜா பூக்கள் உள்ளத்தை கவரும் வகையில் உள்ளது. ஒரு ரோஜா பூ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு ரோஜாவின் விலை ரூ.30-க்கு விற்பனைக்கு செய்யப்பட்டது.

இதுகுறித்து பூ வியாபாரி கூறுகையில், ‘கடந்த ஆண்டு காதலர் தினத்தின்போது ரோஜா விற்பனை அமோக இருந்தது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக உற்பத்தி குறைந்ததால் ரோஜா பூவின் விலை சற்று அதிகமாக உள்ளது. இந்த ஆண்டும் எதிர்பார்த்தபடி விற்பனை களைகட்டும் என நம்புகிறோம்’ என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |