கேரள மாநில மலப்புரம் மாவட்டம் கடம்பூலா பகுதியில் முனீஸ்வரர் என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயிலிருந்து கொச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இண்டிகா ஏர் ஏஜென்ட் விமானத்தில் பயணம் செய்து வந்தார். இவர் நடவடிக்கையில் சந்தேகம் தோன்றியதையடுத்து காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது இவர் முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார். அதனை தொடர்ந்து இவரை உடற் பரிசோதனை செய்தனர்.
அப்போது, தனது உடலுக்குள் மல துவாரத்தில் ஒளித்து வைத்திருந்த ரூ.44.13 லட்சம் மதிப்புள்ள 1185.90 கிராம் எடை கொண்ட 4 தங்க கேப்ஸூல்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அவற்றை உறைகளில் வைத்து அதனை ஒளித்து வைத்து கடத்தி வந்தது காலால் துறையினரின் விசாரணையில் வெளியானது. இவற்றை உருக்கி எடுத்தால் 1008 கிராம் எடை கொண்ட சுத்தமான 24 கேரட் தங்கம் கிடைக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கைதான முனீர் அங்கமாலி முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.