காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் . இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தும் படி ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இவரின் உத்தரவின்படி வெளிப்பாளையம் காவல் நிலைய கான்ஸ்டபிள் வெங்கடேசன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் அமர்ந்திருந்த 3 பேர் கான்ஸ்டபிள் வெங்கடேசனை தகாத வார்த்தையால் பேசி , கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் வெங்கடேசன் வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தியாகராஜனிடம் புகார் அளித்தார். இவர் புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சம்பந்தப்பட்ட 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் அந்த 3 பேரில் இரண்டு பேர் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரகாஷ், தினேஷ் என்பவரும் , மற்றொருவர் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரதீப் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.