வேகத்தடையின் உயரம் அதிகமாக இருப்பதால் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி டவுன் கச்சேரி மேடு பேருந்து நிறுத்தம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலையை கடந்து செல்வது வழக்கமாக இருக்கின்றது. அப்போது விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு நெடுஞ்சாலைதுறை சார்பாக சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் அதிகமாக இருப்பதால் அருகில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். அதிலும் குறிப்பாக வயதானவர்களும், பெண்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து செல்கின்றனர்.
இதேபோன்று வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடை உள்ள இடத்தை கடந்து செல்லும் போது தூக்கி எறியப்பட்டு விபத்து ஏற்படுகிறது. எனவே பொதுவாக நெடுஞ்சாலைத்துறை சார்பாக அமைக்கப்படும் வேகத்தடைகள் உயரம் குறைவாக காணப்படும். ஆனால் இங்கு வழக்கத்திற்கு மாறாக வேகத்தடை அதிகமான உயரத்திற்கு இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆகவே இந்த வேகதடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கோபி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.