Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ரொம்ப தொல்லை கொடுக்கான்” பெயிண்டருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை….!!

கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வளையக்கார வீதி பகுதியில் சேகரின் மகன் மதன் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய  பெரியம்மா மகனான மகேஸ்வரனுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மஞ்சு என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இதனையடுத்து மகேஷ்வரன் தனது குடும்பத்தினருடன் ஈரோடு சாஸ்திரி நகரில் வசித்து வந்துள்ளார். அதன்பின் உறவினர் வீடு என்பதால் மஞ்சு வீட்டிற்கு மதன் அடிக்கடி சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இது மஞ்சுவின் கணவர் மகேஸ்வரனுக்கு தெரியவந்து இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மஞ்சு தனது 6 வயது மகளுடன் வீட்டைவிட்டு வெளியேறி இரணியல் வீதியில் கடந்த 2 மாதங்களாக கொழுந்தனார் மதனுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

அப்போது மதன் தினமும் குடித்துவிட்டு மஞ்சுவை அடிப்பதோடு, பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மதனுக்கும், மஞ்சுவிற்கும் இடையில் கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மதன் வழக்கம்போல் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த மஞ்சு அவரை கயிற்றால் கழுத்தை இறுக்கியுள்ளார். இதுகுறித்து மதனின் உறவினர்களிடம் மஞ்சு செல்போனில் தொடர்புகொண்டு வீட்டிற்கு அவர் குடி போதையில் வந்து மயங்கி விழுந்ததாகவும், ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மதனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மதனின் கழுத்து கயிற்றால் இறுக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்ததால் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி, சப்-இன்ஸ்பெக்டர் சகிலா போன்றோர் மஞ்சுவிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மஞ்சு காவல்துறையினரிடம் கூறியபோது “மதன் அடிக்கடி குடித்து விட்டு என்னை அடித்து பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டு இதற்காக அருகில் வசிக்கும் ராஜா என்பவரை உதவிக்கு அழைத்தேன். அதன்படி ராஜா எனது வீட்டிற்கு வந்து நாங்கள் 2 பேரும் சேர்ந்து மதன் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்றோம்” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மன்சு, ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Categories

Tech |