டி20 உலக கோப்பை தொடரில் முதல் ஆஸ்திரேலிய அணியாக நாங்கள் இந்த கோப்பையை வென்றிருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது என ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.
7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.இதன்பிறகு களமிறங்கிய 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது .இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.இதில் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 53 ரன் எடுத்து சிறந்த தொடக்கத்தை கொடுத்தார் .இதன் பிறகு களமிறங்கிய மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 77 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
இதனிடையே வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறும்போது,” இந்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய ஒன்றாகும். குறிப்பாக முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பையை வென்றிருப்பது எங்களுக்கு மிகவும் பெருமை .அதோடு எங்கள் அணி நிச்சயம் சிறப்பாக செயல்படும் என்று எங்களுக்கு தெரியும் .இந்தத் தொடர் முழுவதும் அணியில் சில தனிப்பட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர் அதே சமயம் ஒரு அணியாகவும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். அதோடு தொடக்கத்திலிருந்தே டேவிட் வார்னர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் .அடுத்ததாக மிட்செல் மார்ஷ் இந்தப்போட்டியில் இன்னிங்சை தொடங்கிய விதம் அருமையாக இருந்தது .அதேபோல் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த வேட் இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு உள்ளார் .இது மொத்தமாக முழு அணிக்கும் கிடைத்த ஒரு வெற்றியாக பார்க்கிறோம் “இவ்வாறு அவர் கூறினார்.